tamiltimes

Thursday, March 26, 2009

தேமுதிக முதல் பட்டியல்
.
Thursday, 26 March, 2009 02:15 PM
.
சென்னை, மார்ச் 26: வரும் மக்களவைத் தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டியிடு கிறது. முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான முதல் பட்டியலை கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார். அத்துடன் இன்றே கன்னியாகுமரி யில் அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கினார்.
.
மற்ற கட்சிகளை பொறுத்தவரை கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை முடிவடையாத நிலையில், தேமுதிக அனைத்து கட்சி களையும் முந்திக்கொண்டு, முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைக்கான ஒரே கட்ட தேர்தல் வரும் மே மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் மறு அணியாகவும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாமக இன்று அதிமுக கூட்டணியில் சேருகிறது. பிஜேபி தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்கும் நிலையில், தேமுதிக தனிக்கட்சியாக அனைத்து 40 தொகுதியிலும் போட்டியிடுகிறது. 40 தொதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தவர்களிடம் கடந்த மூன்று நாட்களாக விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார். இன்று காலை அவர் கன்னியா குமரியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தேமுதிக தனித்தே போட்டியிடுகிறது என்றும் அவர் இன்று அறிவித்தார். அத்துடன் 9 பேர் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பவதாவது:- 2009 மே 13-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. 40 தொகுதிகளுக்கும் 2,276 பேர் விண்ணப்பித்தனர். விருப்ப மனுவை பூர்த்தி செய்து விண்ணப் பித்தவர்களை நேரில் அழைத்து 23.3.2009 முதல் 25.3.2009 வரை தலைமைக் கழகத்தில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்ந்தெடுக்கப் பட்ட வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. 1. திண்டுக்கல் - ப.முத்துவேல்ராஜ், எம்.எஸ்.சி, எம்.எஸ். (யு.எஸ்.ஏ), (பி.எச்.டி). 2. கன்னியாகுமாரி - எஸ்.ஆஸ்டின், எம்.ஏ., ( முன்னாள் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ, தேமுதிக துணைச் செயலாளர்). 3. திருநெல்வேலி - எஸ்.மைக்கேல் ராயப்பன், பி.காம்., 4. விருதுநகர் - க.பாண்டியராஜன், பி.ஈ (ஹானர்ஸ்ட்) எம்.பி.ஏ., 5. சேலம் - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், பி.எஸ்.சி., 6. திருச்சி - ஏ.எம்.ஜி. விஜயகுமார், 7.மதுரை - ஆர்.எம்.முத்து லட்சுமி, பி.ஏ., 8. தேனி - எம்.சி.சந்தனம், 9. நாமக்கல் - என்.மகேஷ்வரன், பி.ஏ.எல்.எல்.பி. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கட்சிகள் இந்த தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யாத நிலையில், தேமுதிக முதல் வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுள்ள துடன், அதன் தலைவர் விஜயகாந்த் இன்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தேமுதிக முன்னணியில் உள்ளது. தேர்தலில் தனித்து போட்டி என்று தேமுதிக அறிவித்திருந்த போதிலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சி ரகசிய உடன்பாடு வைத்துக்கொள்ளும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப் படும் திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், சேலம், தேனி, திருநெல் வேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட் பாளர்களை விஜயகாந்த் அறிவித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
thank u to malai malar

0 Comments:

Post a Comment

<< Home