மூன்று நாள்களுக்குமுன் மும்பை சென்றிருந்தேன். எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிதி நிறுவனம், தாங்கள் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து ஒரு பிரசண்டேஷனைச் செய்யச் சொல்லியிருந்தார்கள். பெரும் முதலீட்டாளர்கள் சிலர் அங்கு இருந்தனர். உலகப் பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் நிலை போன்ற பலவற்றைப் பற்றியும் பேசினார்கள்.பேசிய பலரில் இரு இந்தியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் BP சிங் என்ற அனலிஸ்ட். மற்றொருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்ற இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்.இருவரும் முற்றிலும் வேறான பின்னணியைக் கொண்டவர்கள் என்றாலும் இருவரது பகுப்பாய்வும் ஒரேமாதிரியாக இருந்தது. சிங், அனலிஸ்ட் என்பதால் எண்களை வைத்து விளையாடுபவர்; அதிலிருந்து சில புரிதல்களை முன்வைப்பவர். ஜுன்ஜுன்வாலா நிச்சயமாக பல அனலிஸ்ட்களை வேலைக்கு வைத்திருப்பாராக இருக்கும்; ஆனால் எண்களை மட்டுமே நம்பியிராமல் தனது இதயத்தையும் பின்பற்றி முதலீடு செய்பவர்.இருவரும் அடித்துச் சொன்னது - வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும் என்பது. காங்கிரஸ் கூட்டணி இப்போது இருக்கும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்களைப் பெறுவார்கள் என்றும் பாஜகவும் கம்யூனிஸ்டுகளும் இப்போது இருப்பதைவிடக் குறைவான இடங்களைப் பெறுவார்கள் என்பதும் இவர்களது கணிப்பு.இருவரும், சுவாரசியமாக, விவசாயத்துக்குத் தரப்பட்டுள்ள மான்யத்தை வரவேற்றனர். அதன் காரணமாகவும், மேலும் பல கிராம நலத்திட்டங்களாலும் இப்போதுள்ள அரசின்மீது கிராமப்புற மக்களுக்கு அதிருப்தி இல்லை என்றும், எனவே ஆச்சரியம் தரத்தக்க வகையில் இப்போதுள்ள மோசமான உலகப் பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும்தான் ஒரு incumbent, ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது என்றும் இருவரும் கருதினர்.இது கருத்துக் கணிப்பு என்ற வகைக்குள் அடங்காது. Informed opinion என்று சொல்லலாம். ஆனால் இவர்களது சிந்தனையை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிகிறது. thanks to mr.ykr suresh // pjr
0 Comments:
Post a Comment
<< Home